பிரதோஷம் அன்று சிவாலயம் சென்று வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். ஒவ்வொரு மாதமும் இரண்டு பிரதோஷங்கள் வரும். இவ்வாறு வரும் பிரதோஷங்களில், ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு பலன் உள்ளது.
ஞாயிறு பிரதோஷம் :
சூரிய திசை நடப்பவர்கள் ஞாயிறு அன்று வரும் பிரதோஷத்தில் சிவன் கோவிலுக்கு செல்லவேண்டும். இதனால் சூரிய பகவான் அருள் நமக்கு கிடைக்கும். சூரிய திசையினால் வரும் துன்பங்கள் விலகும். பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேரும்.
திங்கள் பிரதோஷம் :
பிரதோஷத்தில் சோமவாரம் வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. சந்திர திசை நடப்பவர்கள், சந்திரனை லக்கினாதிபதியாக கொண்டவர்கள் கண்டிப்பாக திங்கள் அன்று வரும் பிரதோஷத்தில் கோவிலுக்கு செல்ல வேண்டும்.
இதனால் மனநிம்மதியும், மகிழ்ச்சியும் கிட்டும். மனம் வலிமை பெரும்.
செவ்வாய் பிரதோஷம் :
செவ்வாய் திசை நடப்பவர்கள், செவ்வாயை லக்கினாதிபதியாக கொண்டவர்கள் செவ்வாய்கிழமை வரும் பிரதோஷத்தில் கலந்து கொள்ள வேண்டும்.
இதனால் செவ்வாயால் வரும் கேடுகள் விலகும். பித்ரு தோஷம் நீங்கும். கடன் தொல்லை தீரும்.
புதன் பிரதோஷம் :
புதன் திசை நடப்பவர்கள், புதனை லக்கினாதிபதியாக கொண்டவர்கள் புதன் அன்று வரும் பிரதோஷத்திற்கு செல்ல வேண்டும்.
இதனால் கல்வி சிறக்கும், அறிவு வளரும். படிக்காத பிள்ளை படிக்கும். பெற்றோர்கள் கண்டிப்பாக தங்கள் பிள்ளைகளை புதன் அன்று வரும் பிரதோஷத்திற்கு கோவிலுக்கு அழைத்து செல்வதால் குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்குவர்.
வியாழன் பிரதோஷம் :
குரு பார்க்க கோடி நன்மை என்பார்கள். வியாழன் அன்று வரும் பிரதோஷத்தில் கோவிலுக்கு சென்றால், குரு பகவானின் முழு அருளையும் பெறலாம்.
வெள்ளி பிரதோஷம் :
சுக்ர திசை நடப்பவர்கள்,சுக்கிரனை லக்கினாதிபதியாக கொண்டவர்கள் வெள்ளி அன்று வரும் பிரதோஷத்திற்கு செல்வதால், உறவுகள் வலப்படும். சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.
சனி மஹா பிரதோஷம் :
சனிக்கிழமை வரும் பிரதோஷம் மஹா பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. அத்தனை சிறப்புகள் வாய்ந்தது இந்த சனி மஹா பிரதோஷம். எந்த திசை நடந்தாலும் சனிக்கிழமை கோவிலுக்கு சென்று சிவனை வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது.
ஒரு சனி பிரதோஷம் சென்றால் 120 வருட பிரதோஷம் சென்ற பலன் கிடைக்கும். கிரக தோஷங்கள் விலகும்.