பகவான் கிருஷ்ணர் மன்னராக அரசாட்சி புரியும் தலம், குஜராத் மாநிலத்தில் உள்ள துவாரகை. இந்த தலமானது மோட்ச தலங்களில் ஒன்றாக உள்ளது. இங்குள்ள கிருஷ்ணரை வழிபட்டால் நிச்சயம் மோட்சம் கிட்டும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.
இங்குள்ள கிருஷ்ண பகவானை “துவாரகா நாத்ஜி” என்று அழைக்கின்றனர்.
இந்த கோவிலின் வரலாறானது பின்வருமாறு
மதுராவை ஆட்சி செய்த கம்சன் என்னும் அரக்கன் அங்குள்ள மக்களை துன்புறுத்தினான். அரக்கனை கிருஷ்ணர் கொன்றதால் கோபம் கொண்ட கம்சனின் மாமனாரான ஜராசந்தன் மதுராவின் மீது தொடர்ந்து 18 முறை படையெடுத்து வருகிறார்.
இவ்வாறு தொடர் படையெடுப்பின் காரணமாக மதுராவில் இருந்த மக்கள் பாதிப்படைந்தனர். இதனால் கிருஷ்ணர் துவாரகையில் ஒரு புது நகரை தீர்மானத்து மக்கள் அனைவரையும் அங்கு குடியமர்த்தினார். காலப்போக்கில் இங்கு துவாரகா நாத்ஜி மந்திர் என்னும் பெயரில் கோவில் கட்டப்பட்டது.
இந்த கோவிலில் உள்ள கிருஷ்ணர் தலையில் கொண்டையுடன் மேற்கு நோக்கி அருள் புரிகிறார். இங்குள்ள கிருஷ்ணரை துவாராகாதீசன், துவாரகா நாதன் என்று அழைப்பர். இந்த கோவிலில் அஷ்ட மகிஷிகள் என்னும் கிருஷ்ணரின் எட்டு மனைவியருக்கும், கிருஷ்ணரின் அண்ணன் பலராமருக்கும் சந்நிதிகள் உள்ளன.
இந்த கோவிலில் தினமும் கிருஷ்ணருக்கு மணிக்கொருமுறை உணவும் உடையும் கொடுத்துக்கொண்டே இருப்பர். மொத்தமாக 17 முறை உணவு கொடுக்கப்படும். காலையில் கிருஷ்ணரை எழுப்பும் நிகழ்வை “உடாபன்” என்று அழைப்பர்.
இந்த ஆலயத்தில் ருக்மணி தேவிக்கு சந்நிதி இல்லை காரணம், துர்வாசரின் கோபத்திற்கு ஆளாகி அரண்மனையில் இருந்து ருக்மணி சில காலம் தனித்து வாழ்ந்தது.இதனால் ருக்மணி தேவிக்கு கோவில் ஊருக்கு வெளியில் உள்ளது.