தமிழ்க்கடவுள் முருகப்பெருமானுக்கு பிடித்தமான ஆலயங்கள் இரண்டு என்று அருணகிரிநாதர் கூறுகிறார். அதில் ஒன்று திருச்செங்கோடு, மற்றொன்று திருச்சியில் உள்ள வயலூர்.
இந்த வயலூரில் தான் முருகப்பெருமான் மயில் மீது அமர்ந்து அருணகிரிநாதருக்கு காட்சி கொடுத்தார். இந்த தலத்தில் தான் முருகப்பெருமான் திருப்புகழை பாடினார்.
அருணகிரிநாதர் இந்த வயலூரில் நீண்ட காலம் தங்கியிருந்து முருகப்பெருமானை வழிபட்டு பல பாடல்களை பாடியுள்ளார்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளை போல சிறப்பு வாய்ந்த கோவில் இந்த வயலூர் முருகர் கோவில். அருணகிரிநாதர் இந்த கோவிலில் 18 பாடல்களை பாடியுள்ளார்.
திருப்புகழ் என்னும் பொக்கிஷம் இந்த கோவிலில் இருந்தே உருவானது. முருகப்பெருமானின் பெருமையை சொல்லும் தலமாக இருந்தாலும் இங்கு ஆதி காலத்தில் சிவ பெருமானுக்கே கோவில் உருவாக்கப்பட்டது.
இந்த ஆலயத்தை சோழ அரசர் உருவாக்கியதாக சொல்லுவர். இங்குள்ள சிவபெருமானை சோழர்கள் ஆதி நாதர் என்னும் பெயரில் வழிபட்டனர். தம்மை நாடிவரும் பக்தர்களுக்கு கேட்பதை கொடுப்பதால் இவரை மறப்பிலி நாதர் என்றும் அழைப்பர்.
இந்த கோவிலிக்கு வெளியே முருகர் வேலால் உருவாக்கிய சக்தி தீர்த்தம் உள்ளது. இந்த தடாகத்தை முருகர் தன் தாய், தந்தையரை வழிபட உருவாக்கினார்.
இந்த கோவிலில் மேலும் ஒரு சிறப்பாக அருணகிரிநாதருக்கு காட்சி கொடுத்த பொய்யாமொழி கணபதியும் அருள்பாலிக்கிறார்.இந்த விநாயகரை தான் அருணகிரிநாதர் திருப்புகழில் வரும் காப்பு செய்யுளில் பாடியுள்ளார்.
முருகப்பெருமான் அருணகிரிநாதருக்கு நாவில் ஓம் என்னும் பிரணவ மந்திரத்தை எழுதி திருப்புகழை பாடச்செய்தார் என்பதால் கலைத்துறையில் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட அவர்கள் வாழ்வு வளமாகும்.
வயலூர் சுப்பிரமணியர் மணக்கோலத்தில் குமாரனாக இருப்பதால் செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இவரை வழிபட தோஷம் நீங்கி நல்வாழ்வு கிடைக்கும்.
இந்த வயலூரை நாமும் வாழ்வில் ஒரு நாள் தரிசித்து வாழ்வில் மேலும் உயர்வோம்.